×

விராலிமலை அருகே பல்பொருள் அங்காடி குடோனில் தீவிபத்து

விராலிமலை, மார்ச் 11: விராலிமலை அருகே பல்பொருள் அங்காடிக்கு உண்டான குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திருச்சி சாலையில் பல்பொருள் அங்காடிக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு 9.45 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனே விராலிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே இலுப்பூர் மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இதுகுறித்து விராலிமலை போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kuton ,Viralimalai ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்